தாய் வீடு திரும்பினார் ஹரின்- மனோ MP

நேற்றைய தினம் தான் ஐக்கிய மக்கள் சக்தியினை விட்டு விலகுவதாகவும், சுயதீனமாக செயற்படபோவதாகவும், இடைக்கால அரசுக்கு ஆதரவு வழங்குவதாகவும் அறிவித்த பாரளுமன்ற உறுப்பினர் மீண்டும் தாய் வீடு திரும்பினார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வி மீடியாவுக்கு தெரிவித்தார்.

ஹரின் உணர்ச்சிவசப்பட்டு வெளியிட்ட கருத்தே அது எனவும் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் கட்சியின் கூட்டங்களுக்கு வருகை தந்துள்ளார் எனவும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளோ, கூட்டணிக்குள்ளோ எந்தவித பிளவுகளுமில்லையெனவும் தாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும் மேலும் தெரிவித்த மனோ MP, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆதரவு ஒரு போதும் வளங்கப்படமாட்டாது எனவும் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணி கட்சி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டிலுமில்லை. அத்தோடு நாம் அனைவரும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இருக்கிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் மேலும் எமக்கு தெரிவித்தார்.

தாய் வீடு திரும்பினார் ஹரின்- மனோ MP

Social Share

Leave a Reply