பங்கு சந்தை இரண்டு தினங்களில் பாரிய எழுச்சி ஒன்றை காட்டியுள்ளது. நேற்றைய தினம் பங்கு சந்தை 3.5 சதவீத எழுச்சியினை காட்டியது. இன்று பங்கு சந்தை ஆரம்பித்து 45 நிமிடங்களில் 5.5 சதவீதத்துக்கு மேற்பட்ட எழுச்சி ஏற்பட்டது. இன்று(13.05) 12.30 இற்கு பங்கு பரிமாற்றம் நிறைவடையும் நேரத்தில் 516 சதவீத எழுச்சி ஏற்பட்டது.
அனைத்து பங்கு சுட்டெண் இன்று 8000 புள்ளிகளை தாண்டியுள்ளது. 402 புள்ளிகள் எழுந்து 8156 புள்ளிகளில் இன்று நிறைவடைந்துள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்னர் 7300 அளவில் காணப்பட்டது. ஜனவரி மாத ஆரம்பத்தில் இந்த அனைத்து பங்கு சுட்டெண் 13000 புள்ளிகளை தாண்டி வரலாற்று சாதனை படைத்திருந்தது. பொருளாதார வீழ்ச்சி காரணமாக அந்த எழுச்சி சடுதியாக வீழ்ந்தது.
அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் கடந்த இரண்டு தின எழுச்சிக்கு முக்கியமான காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. நேற்றைய தினம் பிரதமராக ரணில் பதவியேற்கிறார் என்ற அறிவிப்பும், இன்று அவர் பதவியேற்றுள்ள நிலையிலும் இந்த எழுச்சி ஏற்பட்டுளளதாக பங்கு சந்தை விற்பன்னர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
டொலர் வீழ்ச்சியும் இந்த பங்குசந்தை அதிகரிப்பில் ஒரு பங்கினை வழங்கியிருக்கலா எனவும் நம்பப்படுகிறது.