ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதனை தொடர்ந்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை அமைச்சரவையில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால ஸ்ரீசேன தெரிவித்துள்ளார்.
தாம் தமது பாரளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து எடுத்த முடிவின் படி அமைச்சரவையிலோ, அரசாங்கத்திலோ பங்கெடுப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக மைத்திரிபால ஸ்ரீசேன அறிவித்துள்ளார்.
