பிரதமர் – சஜித் கடிதங்களை பகிர்ந்தனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று “கட்சி அரசியலை தள்ளி வைத்து விட்டு, நாட்டை மீட்டெடுக்க அரசோடு இணையுமாறு” எதிர்க்கட்சி தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

நாடும், மக்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உடனடியாக தீர்க்கவேண்டும் எனவும், அதற்குரிய ஆதரவினை வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்திருந்ததோடு அமைச்சரவையில் பங்குபற்றுமாறு கோரியிருந்தார்.

பிரதமரின் கடிதத்துக்கு “அரசோடு இணைய மாட்டாம். தங்களது சரியான வேலைத்திட்டங்களுக்கு எங்கள் ஆதரவு உண்டு” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதச பதில் கடிதம் எழுதியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நல்ல செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கும். ஏற்ககனவே ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தது போன்று அமைச்சரவையில் பங்கேற்காது எனவும், ராஜபக்ஷவினர் அரசிலிருந்து வெளியேறவேண்டும் என்பதில் மக்களோடு இணைந்து உறுதியாக இருப்பதாகவும் சஜித் பிரேமதாச கடிதத்தில் பிரதமருக்கு தெரிவித்துள்ளார்.

பிரதமர் - சஜித் கடிதங்களை பகிர்ந்தனர்.

Social Share

Leave a Reply