அவுஸ்திரேலியா முன்னாள் வீரர் மரணம்

அவுஸ்திரேலியா முன்னாள் வீரர் அன்று சைமண்ட்ஸ் நேற்று(14.05) இரவு 11 மணியளவில் நடைபெற்ற கார் விபத்தில் இறந்துள்ளார். காரில் அவரின் வதிவிடமான டவ்ன்ஸ்விலே பகுதியிலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் பயணித்த கொண்டிருந்த வேளையில் விபத்து இடம்பெற்றுள்ளது. வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே விபத்து ஏற்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது.

அன்று சைமண்ட்ஸ் உலக கிண்ணம் வென்ற அவுஸ்திரேலிய அணியில் 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் இடம்பிடித்திருந்தவர். அதிரடியான சகலதுறை வீரர் அவுஸ்திரேலியா அணிக்காக மத்திய வரிசையில் துடுப்பாடியவர் இவர். 198 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளிலும், 26 டெஸ்ட் போட்டிகளிலும், 14 டுவென்டி டுவென்டி போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 1462 ஓட்டங்களையும், ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 5088 ஓட்டங்களையும், 337 ஓட்டங்களை டுவென்டி டுவென்டி போட்டிகளிலும் பெற்றுளளர். 24 டெஸ்ட் விக்கெட்களையும், 113 விக்கெட்களை ஒரு நாள் சர்வ்தேசப் போட்டிகளிலும், 8 விக்கெட்களை டுவென்டி டுவென்டி போட்டிகளிலும் கைப்பற்றியுள்ளார்.

எதிரணி வீரர்களோடு சண்டை பிடிப்பதில் முன் நிற்கும் இவர் கடும் கோவக்காரன். ஆனால் போட்டிகளின் பின்னர் எல்லோரோடும் சகாயமாக பழகும் நபர் என சொல்லப்படுகிறது.

கிரிக்கெட் அவுஸ்திரேலியாவும், அவரின் சக வீரர்களும், சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் அவரின் மறைவுக்கு அஞ்சலிகளை தெரிவித்து வருகின்றனர்.

அவுஸ்திரேலியா முன்னாள் வீரர் மரணம்

Social Share

Leave a Reply