எரிபொருள் விநியோகம் சீராகும் வரை வரிசை வேண்டாம்

எரிபொருள் விநியோகம் சீராக ஆரம்பித்துள்ளமையினால் இன்று(16.05) முதல் அடுத்த மூன்று தினங்களுக்கு மக்கள் வரிசையில் நிற்க வேண்டாமென வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர சற்று முன்னர் மக்களுத்கு தெரிவித்துள்ளார்.

1190 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறைவடையும் வரை வரிசைகளில் காத்திருப்பதை தவிர்க்குமாறு மேலும் அவர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இந்திய கடன் மூலம் 2 கப்பல் டீசல் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், மேலும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 3 கப்பல் வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், இன்று திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இன்று காலை முதல் மக்கள் வரிசைகளில் காத்து நிற்கின்றனர்.

அரசாங்கம், அமைச்சரது அறிவிப்புகள் வந்தாலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நடைபெறுவது வேறு என்பது கடந்த காலங்களில் நேரடியாக பார்க்க முடிந்துள்ளது. எம்மாலும் கூட அனுபவிக்க முடிந்துள்ளது. ஆகவே மக்கள் வரிசைகளில் நின்று தமக்கான எரிபொருளை பெற்று வருகின்றனர்.

இன்று காலை முதல் எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக எரிபொருள் காவி வண்டிகள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். கொழும்பின் பல எரிபொருள் நிலையங்கள் இன்று காலை முதல் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்துள்ளன. வரிசையில் நிற்காமல் எவ்வாறு மக்கள் எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும்?

எரிபொருள் விநியோகம் சீராகும் வரை வரிசை வேண்டாம்

Social Share

Leave a Reply