பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்துக்கு தாம் ஆதரவு வழங்குவதாக பொதுஜன பெரமுன அரசாங்கத்திலிருந்து பிரிந்து சுயாதீனமாக இயங்கிய குழு அறிவித்துள்ளது. அந்த குழு சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குகின்ற போதும், அமைச்சு பதவிகளை பொறுப்பேற்பதில்லை எனவும், மக்கள் குறைகளை தீர்ப்பதற்கான குழுவில் தாம் பங்குபற்றவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அழைப்புக்கு தாம் இவ்வாறு பதில் வழங்கியுள்ளதாகவும் மேலும் வர அவர் தெரிவித்துள்ளார்.
