கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் மூன்று புகையிரத சேவைகள் நாளை(17.05) முதல் வழமைக்கு திரும்பவுள்ளதாக இரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிகாலை 5 மணிக்கு கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் குளிரூட்டபப்ட்ட நகர்சேர் கடுகதி, 5.45 இற்கு புறப்படும் யாழ்தேவி, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து 11.50 இற்கு புறப்படும் உத்த்ராதேவி கடுகதி புகையிரதம் ஆகியன வழமை போலவே சேவைகளில் ஈடுபடவுள்ளதாகவும், காங்கேசன்துறையிலிருந்து வழமையான நேரங்களில் சேவைகள் ஆரம்பிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
