இன்று(17.05) காலை பாராளுமன்றம் கூட்டப்பட்ட வேளையில் பிரதி சபாநாயகர் தெரிவுக்கான முன்மொழிவு சபாநாயகரினால் வழங்கப்பட்டது.
இதன் போது ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக ரோஹிணி கவிரட்ன பரிந்துரை செய்யப்பட்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக அஜித் ராஜபக்ஷ பரிந்துரை செய்யப்பட்டார். தேர்தலின்றி ஒருவரை தெரிவு செய்யுமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாகவும், சுயாதீன குழு சார்பாகவும் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இருப்பினும் எவரும் தங்கள் பரிந்துரைகளில் பின்வாங்காத நிலையில் வாக்களிப்பு நடைபெற்றது.
நடைபெற்ற இரகசிய வாக்களிப்பில் அஜித் ராஜபக்ஷ 23 வாக்குகளினால் வெற்றி பெற்று பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார்.
அஜித் ராஜபக்ஷ 109 வாக்குகளையும், ரோஹிணி கவிரட்ன 73 வாக்குகளையும் பெற்றனர். 23 வாக்குகள் செல்லவுப்படியற்ற வாக்குகள்.
