இ.தொ.கா ஜனாதிபதிக்கு எதிராகவே வாக்களித்தது – ஜீவன்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பாரளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் ஜனாதிபதிக்கு எதிராக கொண்டு வந்த பிரேரணைக்கே ஆதரவாகவே வாக்களித்தனர் என்பதனை கட்சியின் செயலாளரும், பாரளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் உறுதி செய்தார்.

இலத்திரனியில் வாக்களிப்பு தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரனின் வாக்கு ஜனாதிபதிக்கு ஆதரவாக காண்பிக்கப்பட்டது. இருப்பினும் அந்த வாக்கை வாய்மூலமாக சபாநாயகர் கேட்டு அறிந்து ஜனாதிபதிக்கு எதிராக வாக்களிக்கப்பட்டதாக கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை வீடியோ காட்சி மூலமாக தெளிவுபடுத்தி பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் உறுதி செய்திகொண்டார். இந்த சம்பவத்தின் புகைப்படங்களை பார்வையிட்டவர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒவ்வொரு வாக்குகளை பிரித்து வழங்கி இரட்டை வேடம் பூண்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இ.தொ.கா ஜனாதிபதிக்கு எதிராகவே வாக்களித்தது - ஜீவன்

Social Share

Leave a Reply