பிரான்சில் இன்று அதிகாலை(29.05 – இலங்கை நேரப்பபடி) நிறைவடைந்த லிவர்பூல் மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளுக்கிடையிலான சம்பியன் லீக் கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெய்ன் நாட்டின் கழகமான ரியல் மாட்ரிட் அணி 1-0 என வெற்றி பெற்றுள்ளது.
59 ஆவது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கான வெற்றி கோலை வினிசியஸ் ஜூனியர் அடித்தார். இவர் பிரேசில் நாட்டின் 21 வயதான வீரர்.
இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட் அணி 12 ஆவது தடவையாக சம்பியனாக மகுடம் சூடியுள்ளது. இதற்கு முன்னர் 2017 ஆம் ஆண்டு சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை அதன் பின்னர் இறுதிப் போட்டிக்கு தெரிவாகவில்லை. 1955 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சம்பியன் லீக் தொடரில், ரியல் மாட்ரிட் அணி 16 தடவைகள் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
இங்கிலாந்தின், லிவர் பூல் அணி 10 தடவைகள் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. அவற்றில் 06 தடவைகள் வெற்றி பெற்றுள்ளது. 2019 ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு தெரிவான லிவர்பூல் அணி சாம்பியனாக வெற்றி பெற்றது.
ஐரோப்பிய கழகங்கள் விளையாடும் சம்பியன் லீக் கால்பந்தாட்ட போட்டி தொடரின் இறுதிப் போட்டி ரஸ்சியாவில் நடைபெறவிருந்தது. ஆனால் ரஸ்யா – யுக்ரைன் யுத்தம் காரணமாக, இந்தப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பரிஸுக்கு மாற்றப்பட்டது.
தகவல்
வி.பிரவிக் (தரம் 04)
