பாணந்துறை, அட்டலுகம ஒன்பது வயது சிறுமி ஆயிஷாவின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தானே அந்த கொலையை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சிறுமி காணாமல் போன நாள் முதல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை மாலை குறித்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற சந்தேகம் எழுந்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனடிப்படையில் பாணந்துறை, பண்டாரகம பகுதியை சேர்ந்த 29 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று பாணந்துறை வைத்தியசாலையில் நடைபெற்ற பிரேத பரிசோதனைகளில் சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, அவர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
