இலங்கைக்கு கடனில்லை – உலக வங்கி

இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள், உடனடி தேவைகளுக்காக வழங்கப்படுமென உலக வங்கி கூறியுள்ளதாக வெளியுறவு துறை அமைச்சினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தாம் அவ்வாறு தெரிவிக்கவில்லையென உலக வங்கிக்கான இலங்கை பணிப்பாளர் பாரிஸ் H ஹடாட்- ஷெர்வோஸ் தெரிவித்துள்ளார்.

வெளியுறவு துறை அமைச்சருக்கும், உலக வங்கியின் நாட்டுக்கான முகாமையாளர் சியா கன்டா ஆகியோரது சந்திப்பின் அடிப்படையிலேயே குறித்த தகவல் வெளியாகியிருந்தது.

ஊடகங்கள் மூலமாக பிழையான தகவல்கள் வெளியாகியுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார். உலக வங்கி இலங்கைக்கு நிதிபாலமூடாக அல்லது புதிய கடன் மூலமாக 700 மில்லியன் டொலர்களை வழங்க சம்மதம் தெரிவித்ததாக வெளியான செய்திகளையே அவர் மறுத்துள்ளார்.

கடந்த வாரம் இலங்கைக்கான கடன்கள் எதனையும் தாம் வழங்க மாட்டோம் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் ஏற்பாடுகளுடனான திட்டங்களின் அடிப்படையிலேயே தாம் எதிர்காலத்தில் செயற்படுவோமென உலக வங்கி அறிவித்திருந்தது.

ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட திட்டங்களான பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்குதல், சிறு வியாபாரங்களுக்கு உதவுதல், மருத்துவ உதவிகள், வறுமை கோட்டுக்குட்பட்ட குடும்பங்களுக்கு பண உதவிகள் வழங்குதல் ஆகிய திட்டங்களை மட்டுமே செயற்படுத்தவுள்ளதாக உலக வங்கிக்கான இலங்கை பணிப்பாளர் பாரிஸ் H ஹாடாட்- ஷெர்வோஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடனில்லை - உலக வங்கி

Social Share

Leave a Reply