வவுனியா, கணேசபுரம் பகுதியில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் இறந்த நிலையில், பாலடைந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தற்கொலையாக இருக்கலாமென்ற சந்தேகம் நிலவுகின்ற போதும், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மோப்ப நாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட வேளையில் அருகிலுள்ள வீட்டுக்கு சென்றமையினால் கொலை அல்லது வேறு ஏதும் சம்பவங்கள் நடைபெற்று இருக்கலாமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மோப்ப நாய் சென்ற வீட்டில் மதுபான போத்தல்கள் காணப்பட்டுள்ளன.
உடல், வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைகளின் பின்னரே இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும்.
இறந்த மாணவியின் தாயார் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். தகப்பனை பிரிந்து உறவினரின் பராமரிப்பிலேயே இறந்த மாணவி வசித்து வந்துள்ளார்.
(தகவல் – கார்த்தீபன்)
