இந்திய பின்னணி பாடகர் KK என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னாத், மாரடைப்பு காரணமாக தனது 53 ஆவது வயதில் நேற்று(31.05) இரவு 10.30 மணியளவில் மரணமானார்.
கொல்கொத்தாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடல்களை பாடிவிட்டு தங்குமிடத்துக்கு திரும்பியவர் மயங்கி வீழ்ந்த நிலையில், வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட போதும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹிந்தி பாடல்களை அதிகமாக பாடியுள்ள KK தமிழிலும் பாடல்களை பாடியுள்ளார். இசைப்புயல் A.R ரஹ்மானினால் ஹிந்தி திரையுலகில் பாடகராக அமிமுகம் செய்யப்பட்ட இவர் தமிழிலும் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். மலையாளம், தெலுங்கு உட்பட பல மொழிகளிலும் பாடல்களை பாடியுள்ளார்.
மின்சாரக்கனவு திரைப்பட ஸ்டோபரி கண்ணே பாடல் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்த இவர் பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது, அப்படி போடு, கல்யாணம்தான் கட்டிக்கிட்டு, உயிரின் உயிரே உட்பட ஏராளமான தமிழ் பாடல்களை பாடியுள்ளார்.
இந்தியாவின் முன்னணி பாடகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருந்த KK இன் இந்த திடீர் இறப்பு இந்திய சினிமா துறைக்கு பாரிய இழப்பு.
