21 ஆம் திருத்த சட்டத்தை அமுல் செய்வதில் சிக்கல் நிலைகள் ஏற்படலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. ஆளும் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியினை கடந்த திங்கட்கிழமை சந்தித்தனர். அதன் பின்னரே இந்த ஊகங்கள் எழுந்துள்ளன.
பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக பொருளாதர மேம்படுத்தலில் கவனம் செலுத்த வேண்டுமெனவும், அரசியல் சீர் திருத்தம் உடனடியாக தேவை இல்லை என்ற நிலைப்பாட்டில் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாரளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ ஆதரவாளர்கள், இந்த சட்ட அமுலாக்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் சீர் திருத்தம் செய்யப்பட வேண்டுமென்பது கட்டாயமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாகவும் அறிய முடிகிறது.
சட்ட சீர் திருத்தம் செய்யப்பட்டாலே சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளையும், வெளிநாட்டு உதவிகளையும் பெற முடியுமென்றும் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.
21 ஆம் திரித்த சட்டத்தை தோற்கடிக்க சதி நடைபெறுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூறியுள்ளது. தாம் 21 ஆம் திருத்த சட்டத்துக்கு எதிரானவர்கள் என்ற மாயை உருவாக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கருத்து கூறியுள்ளார்.
இந்த வாரம் 21 ஆம் திருத்த சட்டம் தொடர்பில் கலந்துரையாடல்களை நிறைவு செய்து வரும் வாரம் அமைச்சரவை அனுமதிக்க கையளிக்கப்படுமென சட்ட சீராக்கல் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
