பல்டி அடித்த கார். 12 வாகனங்கள் சேதம்

கொழும்பு, பம்பலப்பிட்டி வஜிரா வீதியில் கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 12 வாகனங்கள் சேதமடைந்துள்ளன. விசாகா மகளிர் பாடசாலைக்கு முன்னாள் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களே இவ்வாறு சேதமடைந்துள்ளன. 9 கார்களும், 2 முச்சக்கர வண்டிகளும் சேதமடைந்துள்ளன. விபத்தை ஏற்படுத்திய கார் தலைகீழாக புரண்டது.

கார் ஓட்டுநர் அடங்கலாக இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாரதி மது போதையில் வாகனத்தை ஒட்டியிருக்கலாமென்ற சந்தேகம் நிலவிய போதும், மருத்துவ சோதனைகளில் அவர் மதுபோதையில் இருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று மாலை நடைபெற்ற இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்டி அடித்த கார். 12 வாகனங்கள் சேதம்

Social Share

Leave a Reply