இலங்கை 20-20 அணி அறிவிப்பு

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 20-20 கிரிக்கெட் போட்டி தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான முதற் போட்டி 07 ஆம் திகதியும், இரண்டாம் போட்டி 08 ஆம் திகதியும் கொழும்பு R.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 11 ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்தில் மூன்றாவது போட்டி நடைபெறவுள்ளது.

பானுக்க ராஜபக்ஷ மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். IPL போட்டியில் சென்னை அணிக்காக விளையாடி எதிர்பார்ப்பை உருவாக்கிய குட்டி மாலிங்க என பெயர் பெற்றுள்ள மதீஷ பத்திரன அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணி விபரம்

01) தஸூன் சாணக்க – தலைவர்
02) பத்தும் நிஸ்ஸங்க
03) தனுஷ்க குணதிலக
04) குசல் மென்டிஸ்
05) சரித் அசலங்க
06) பானுக ராஜபக்ஷ
07) நுவனிது பெர்னாண்டோ
08) லஹிரு மதுஷங்க
09) வனிந்து ஹசரங்க
10) சமிக்க கருணாரட்ன
11) துஷ்மந்த சமீர
12) கசுன் ரஜித
13) நுவான் துஷார
14) மதீஷ பத்திரன
15) ரமேஷ் மென்டிஸ்
16) மகேஷ் தீக்ஷனா
17) பிரவீன் ஜெயவிக்ரம
18) லக்ஷன் சண்டகன்

மேலதிக இருப்பு வீர்ரகள்

01) ஜெஃப்ரி வண்டர்சே
02) நிரோஷன் டிக்வெல்ல

இலங்கை 20-20 அணி அறிவிப்பு

Social Share

Leave a Reply