மதுபான, சிகரெட் விலையேற்றங்கள்

பெறுமதி சேர் வரி அதிகரிப்பு காரணமாக சிகரெட் மற்றும் மதுபானங்களின் விலைகள் இன்று (01.06) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சிகரெட் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிரிக்கப்பட்டுள்ளது.

மாதுபானங்களின் விலைகளை நிர்ணயமின்றி அதிகரிக்கப்பட்டுள்ளன. DCSL நிறுவனம் தயாரிக்கும் இலங்கையின் அதிக விற்பனையாகும் “கள்” என அழைக்கப்படும் அதி விசேஷம் சாராயத்தின் விலை 680 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய விலை 1500 ரூபா. பெறுமதி சேர் வரி அதிகரிப்பு 4 சதவீதமாக காணப்படுகிற போதும் இந்த அதிகரிப்பானது கிட்டத்தட்ட 35 சதவீத அதிகரிப்பாகும்.

அநேகமான மதுபானங்களது விலைகள் 30 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மதுபானங்களின் விலை அதிகரிப்பை தங்களால் கட்டுப்படுத்த முடியாது எனவும், மூலப்பொருட்களுக்கான வரி அதிகரிப்பும் நடைபெற்றுள்ளதனால் கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயிக்க முடியாத நிலை காணப்படுவதாக மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

சந்தையில் முன்னணியில் உள்ளவர் விலைகளை நிர்ணயிப்பதாகவும், மற்றையவர்கள் அதற்கு ஏற்றால் போல விலைகளை மாற்றி செல்வதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

பியர்களின் விலை போத்தல் ஒன்றுக்கு 30 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது.

வேற்றுப்போத்தல்களுக்கான விலை 80 ரூபவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மதுபான, சிகரெட் விலையேற்றங்கள்

Social Share

Leave a Reply