சமீபத்தில் அரசாங்கம் வரிக்கு மேல் வரி விதித்தது. அவ்வாறு விதிக்கப்பட்ட வரிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும். அதன்பிரகாரம் தொலைபேசிகள் சார்ந்தும் மிகப்பெரிய வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது சமூக ஊடகங்களை முடக்குவதற்கான ஒரு நிகழ்ச்சி நிரலாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
விளைச்சல் பாதிப்புக்கு இதுவரை இழப்பீடு வழங்காத அரசாங்கம், மக்களை விவசாயம் செய்யச் சொல்கிறார்கள் எனவும், இரண்டு வருடங்களாக காபனிக் உரம் எனக் கூறிக் கொண்டு புராணம் சொல்லி விவசாயத்தை அழித்தவர்களே இப்போது விவசாயம் செய்யச் சொல்வது கேலிக்கூத்தானது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகைக்கும்,பாராளுமன்றம் மற்றும் அமைச்சர்களுக்கான வீடுகளுக்கும் எந்த வித தட்டுப்பாடுகளும் நிலவுவதில்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மக்களுக்கு அந்த விடயம் சார்ந்து பிரச்சினைகள் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று (05.06) நடைபெற்ற களுத்துறை மாவட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயங்களை கூறியுள்ளார்.
உணவுப் பாதுகாப்பிற்காக ஐக்கிய மக்கள் சக்தி விவசாய புரட்சியை ஆரம்பிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அதன் அங்குரார்பண நிகல்வு நடைபெறவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
இரண்டு வருட ராஜபக்ஸ சாபத்தின் அவல நிலை உருவாகியுள்ள அதேவேளை, இன்று கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் கடுமையான ஊட்டச் சத்து சார்ந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் சஜித் தெரிவித்துள்ளார்.
