6 மாதம் தொடக்கம் 12 வயதான சிறுவர்களுக்கு, இலங்கையில் புதிய தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
குழந்தைகளின் உடம்ப, வாய், மூக்கு மற்றும் கைகளில் சிவப்பு நிறமான கொப்பளங்கள் ஏற்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று, கொழும்பு உட்பட பல இடங்களில் இந்த தொற்று இனம் காணப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்று ஏற்பட்டால் பரசிட்டமோல் வழங்கி பிள்ளைகளை ஓய்வு எடுக்க வைக்குமாறு குழந்தை சிறப்பு நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார். இந்த தொற்று பாரதூரமானதல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ள அதேவேளை, சாதரணமாக ஏற்படும் தொற்று எனவும் கூறியுள்ளார்.
விடுமுறையின் பின்னர் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் நிலையில், பெற்றோர் இந்த தொற்று தொடர்பில் அவதானமாக இருப்பது நல்லதே. கைகளை கழுவுதல் மற்றும் தொற்று நீக்கிகளை பாவிப்பதனால் தொற்றுகளிலிருந்து பிள்ளைகளை பாதுக்காக்க முடியும்.
