இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் 21 ஆம் திருத்த சட்டம் அமைச்சரவை அனுமதிக்காக நீதி மற்றும் சட்ட சீராக்கல் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அனைத்து கட்சி கூட்டங்களில் உள்வாங்கப்பட்ட கருத்துக்கள் உள்ளடங்கிய வரைபு ஏற்கனவே அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அது தொடர்பில் கலந்தாலோசித்து அனுமதி வழங்கப்படுமென அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர், பாராளுமன்றத்தில் இந்த 21 ஆம் திருத்த சட்டத்தின் வரைபு சமர்ப்பிக்கப்படும். பாராளுமன்ற அனுமதி கிடைத்ததன் பின்னர் அது நடைமுறைக்கு வரும்.
மின் கட்டண அதிகரிப்புக்கான அனுமதியும் அமைச்சரவையில் இன்று சமர்பிக்கப்படவுள்ளது.
இன்றைய அமைச்சரவை கூட்டத்தில், விவசாயத்துக்காக அரச நிலங்கள் ஒரு வருட கால விளைச்சலுக்காக மாவட்ட செயலாளர்களினால் உரியவர்களுக்கு வழங்கப்படும் திட்டம் விவாசாய அமைச்சரினால் சமர்பிக்கப்படவுள்ளது.
இன்று முதல் மாவட்ட செயலாளர்கள் காணிகளை மக்களுக்கு வழங்கும் திட்டங்களை ஆரம்பிக்க முடியுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு நீரேந்து பகுதிகள் மற்றும், தொல் பொருள் திணைக்களத்துக்கு உட்பட்ட நிலங்கள் வழங்கப்பட முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
