SL V AUS 20-20- ஆஷிக்கு இலகு வெற்றி

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது 20-20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி இலகுவான 10 விக்கெட்களினாலான வெற்றியினை பெற்றுக் கொண்டது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளடங்கிய தொடரில் அவுஸ்திரேலியா அணி 1- 0 என முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கை அணி சிறப்பான ஆரம்பத்தை பெற்ற போதும் மத்திய தர வரிசை வீரர்கள் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தது இலங்கை அணிக்கு பாரிய பின்னடைவை வழங்கியது. 28 ஓட்டங்களுக்கு இறுதி ஒன்பது விக்கெட்களை இழந்ததன் காரணமாக இலங்கை அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 128 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களின் பொறுமையற்ற, நுட்பமற்ற துடுப்பாட்ட பிரயோகங்களே இந்த குறைந்த ஓட்ட எண்ணிக்கைக்கு காரணமாக அமைந்தது.

அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் ஜோஸ் ஹெசல்வுட் மிக அபாரமாக பந்து வீசி இலங்கை அணியின் விக்கெட்களை கைப்பற்றினார். நான்கு விக்கெட்களை அவர் கைப்பற்றினார்.

அவுஸ்திரேலிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அணியின் தலைவர் ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் அதிரடியாக அடித்தாடி வெற்றியினை ஓவர்களில் பெற்றுக் கொடுத்தனர்.

ஸ்கோர் விபரம்.

துடுப்பாளர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓப64
ஆரோன் பின்ச்  614044
டேவிட் வோர்னர்  704490
       
       
       
       
       
       
       
       
       
உதிரிகள்  03   
ஓவர் –14விக்கெட் –00மொத்தம்  134   
பந்துவீச்சாளர்ஓவர்ஓ.ஓஓட்டம்விக்கெட்
மகேஷ் தீக்க்ஷன04002500
நுவன் துஷார02002100
துஷ்மந்த சமீர04004800
வனிந்து ஹசரங்க02002700
சமிக்க கருணாரட்ன02001300
     
துடுப்பாளர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓப64
தனுஷ்க குணதிலக்கபிடி,மிட்செல் மார்ஷ்ஜோஷ் ஹெசல்வுட்261531
பதும் நிஸ்ஸங்கBowledமிட்செல் ஸ்டார்க்363121
சரித் அசலங்கRun Out 383431
குசல் மென்டிஸ்பிடி,அஷ்டன் எகர்ஜோஷ் ஹெசல்வுட்010500
பானுக ராஜபக்ஷபிடி, மத்யூ வேட்ஜோஷ் ஹெசல்வுட்000100
தஸூன் ஷானகL.B.Wஜோஷ் ஹெசல்வுட்000200
வனிந்து ஹசரங்கபிடி,மிட்செல் ஸ்டார்க் 17 152  0
சமிக்க கருணாரட்னRun Out 010200
தஷ்மந்த சமீரபிடி,  வோர்னர்கேன் ரிச்சர்ட்சன்010500
மகேஷ் தீக்க்ஷன பிடி, வோர்னர் கேன் ரிச்சர்ட்சன் 01 04 00 
நுவன் துஷார   00 03 0 0
உதிரிகள்  07   
 ஓவர் 19.3விக்கெட் 10மொத்தம்  128   
பந்துவீச்சாளர்ஓவர்ஓ.ஓஓட்டம்விக்கெட்
மிட்செல் ஸ்டார்க்04 00 2603
ஜோஷ் ஹெசல்வுட்04001604
மிட்செல் மார்ஷ்02002100
கிளென் மக்ஸ்வெல்02001800
கேன் ரிச்சர்ட்சன்03.3002201
அஷ்டன் எகர்04002500

————————-

முதல் இன்னிங்ஸ்

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது 20-20 போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது.

இலங்கை அணி சிறப்பான ஆரம்பத்தை பெற்ற போதும் மத்திய தர வரிசை வீரர்கள் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தது இலங்கை அணிக்கு பாரிய பின்னடைவை வழங்கியது. அதன் காரணமாக 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 128 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களின் பொறுமையற்ற, நுட்பமற்ற துடுப்பாட்ட பிரயோகங்களே இந்த குறைந்த ஓட்ட எண்ணிக்கைக்கு காரணமாக அமைந்துள்ளது. 28 ஓட்டங்களுக்கு இறுதி ஒன்பது விக்கெட்களை இழந்தது இலங்கை அணி

அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் ஜோஸ் ஹெசல்வுட் மிக அபாரமாக பந்துவீசி இலங்கை அணியின் விக்கெட்களை கைப்பற்றினார்.

பலமான, அதிரடியான அவுஸ்திரேலியா துடுப்பாட்ட வீரர்கள் இந்த வெற்றியிலக்கை பெறாமல் தடுப்பது இலகுவானதல்ல.

—————————-

நாணய சுழற்சி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாஅணிகளுக்கிடையிலான முதலாவது 20-20 போட்டிக்கான நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியாஅணி வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதச மைதானத்தில் இந்த போட்டி ஆரம்பித்துள்ளது. கடந்த பல நாட்களாக கொழும்பில் மழை பெய்த போதும், இன்று குளிரான வானிலை காணப்படுகின்ற போதும் மழைக்கான வாய்ப்புகள் இதுவரை தென்படவில்லை.

அணி விபரம்
இலங்கை அணி – 1 தனுஷ்க குணதிலக்க, 2 பதும் நிஸ்ஸங்க, 3 சரித் அசலங்க, 4 குசல் மென்டிஸ் (வி.கா), 5 பானுக ராஜபக்ஷ, 6 தஸூன் ஷானக (தலைவர்), 7 வனிந்து ஹசரங்க, 8 சமிக்க கருணாரட்ன, 9 நுவன் துஷார, 10 துஷ்மந்த சமீர, 11 மகேஷ் தீக்க்ஷன

அவுஸ்திரேலியா உத்தேச அணி – 1 ஆரோன் பின்ச் (தலைவர்), 2 டேவிட் வோர்னர், 3 மிட்செல் மார்ஷ், 4 கிளென் மக்ஸ்வெல், 5 ஸ்டீவன் ஸ்மித், 6 மார்கஸ் ஸ்டோய்னிஸ், 7 மத்யூ வேட் (வி .கா), 8 எஷ்டன் எகர், 9 மிட்செல் ஸ்டார்க், 10 கேன் ரிச்சர்ட்சன், 11 ஜோஷ் ஹெசல்வுட்

SL V AUS 20-20- ஆஷிக்கு இலகு வெற்றி

Social Share