பாராளுமன்ற உறுப்பினர் பாட்லி சம்பிக்க ரணவக்க ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி சுயாதீன எதிர் கட்சி உறுப்பினராக செயற்படவுள்ளதாக இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இந்த முடிவினை ஏற்கவனே எழுத்து மூலமாக தான் எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு அறிவித்துள்ளதாகவும் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கும், சம்பிக்க ரணவக்கவுக்கும் இடையில் நீண்ட நாட்களாக முறுகல் நிலை காணப்பட்ட நிலையில் இந்த முடிவினை சம்பிக்க ரணவக்க அறிவித்துள்ளார். இருவரது கட்சி நிகழ்வுகளிலும் மற்றையவர் கலந்து கொள்ளாமலும் தவிர்த்து வந்தமை சுட்டிக் காட்டத்தக்கது.