அமைச்சரவை கூட்டத்தில் மஹிந்த?

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தனவின், ஊடக சந்திப்பை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று(08.06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் “அமைச்சரவை கூட்டம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது தலைமையில் நடைபெற்றதென” அமைச்சர் பந்துல குணவர்தன ஆரம்பித்துள்ளதனை செய்தி வெளியிட்ட ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவை பொறுப்புகள் எதனையும் கொண்டிராத நிலையில் எவ்வாறு கலந்து கொண்டார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அமைச்சரவை கூட்டத்தில் மஹிந்த?

Social Share

Leave a Reply