இலங்கையின் ஜனாதிபதிகளை விட ஆயிரம் மடங்கு சிறந்தவர் தனது தமையன், பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா என நிமல் பெரேரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தம்மிக்க பெரேரா நேர்மையான மனிதரெனவும், தன்னுடைய வரிகளை சதமளவிலும் விடாமல் செலுத்தியுள்ளார் எனவும் நிமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
நிமல் பெரேரா பங்குசந்தை வியாபாரத்தில் பெயர் போனவர். தம்மிக்க பெரேரா போன்று பல நிறுவனங்களில் நிர்வாக சபைகளில் பணிப்பாளராக இருக்கின்றார். தம்மிக்க பெரேரா பல நிறுவனங்களிலிருந்து விலகிய நிலையில் அவற்றை நாமல் பெரேரா பொறுப்பேற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.