இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு அதிக கொழுப்பு காணப்படுவதனால் இலங்கை கிரிக்கெட் அவர்களுக்கு அபராதம் விதிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை கிரிக்கெட் இது தொடர்பில் அறிவித்தல் எதனையும் வெளியிடவில்லை.
தோலுக்குள் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகபட்சமாக 85 mm ஆக இருக்க வேண்டுமென்பது இலங்கை கிரிக்கெட் விதிமுறை. ஆனால் வனிது ஹசரங்க, பானுக்க ராஜபக்ஷ, தனுஷ்க குணதிலக ஆகியோருக்கு கொழுப்பு மட்டம் அதிகமாக இருப்பதாக சோதனைகள் உறுதி செய்துள்ளன.
பானுக்க ராஜபக்ஷ 106.2 mm, தனுஷ்க குணதிலக 97.8 mm, வனிது ஹசரங்க 93.6 mm ஆகிய அளவுகளில் காணப்படுகின்றன. இலங்கை கிரிக்கெட்டின் வீரர்களுக்கான புதிய உடற் தகுதி விதிமுறைகளின் படி உடற் தகுதியினை சீராக பேணாதவர்களுக்கு தண்டம் அறவிடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஒப்பந்த தொகையில் 20 சதவீதம் தண்டமாக அறவிடப்படும்.
இந்த புதிய நடைமுறை காரணமாகவே இந்த மூவரும் அணியில் இடம் பிடிக்க முடிந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
