இந்தியா தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20-20 போட்டி ஆரம்பித்துள்ளது. கட்டாக்கில் ஆரம்பித்துள்ள போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
இரவு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்று 5 போட்டிகளடங்கிய தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்தியா அணி மாற்றங்களின்றி விளையாடும் அதேவேளை தென்னாபிரிக்கா அணி இரண்டு மாற்றங்களை செய்துள்ளது. குயின்டன் டி கொக் இன்று விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ரீஷா ஹென்றிக்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். ரிஸ்டன் ஸ்டப்ஸ் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஹென்றிச் க்ளாஸன் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்தியா
1 ருதுராஜ் கெய்க்வாட், 2 இஷன் கிஷன், 3 ஷ்ரேயாஸ் ஐயர், 4 ரிஷாப் பான்ட்(தலைவர், வி.கா), 5 ஹார்டிக் பாண்ட்யா, 6 தினேஷ் கார்த்திக், 7 ஹர்ஷால் பட்டேல், 8 புவனேஷ்வர் குமார், 9 அவேஷ் கான், 10 அக்ஷர் பட்டேல் 11 யுஸ்வேந்திர சஹால்
தென்னாபிரிக்கா
1 குயின்டன் டி கொக் (வி.கா), 2 ரிஸ்டன் ஸ்டப்ஸ் 3 டெம்பா பவுமா, 4 அன்று நோக்ஜா , 5 ரஸ்ஸி வன் டு டுசென் 6 டேவிட் மில்லர், 7 டுவைன் பிரிட்டோரியஸ், 8 ககிசோ றபாடா, 9 வெய்ன் பார்னல், 10 கேஷவ் மஹாராஜ் 11 ரப்ரைஸ் ஷம்சி
