பாரளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் ஆற்றிய உரையில் “அவர் மே 09 நடைபெற்ற கலவரங்களுக்கு ஆதரவளித்தார் அல்லது தூண்டியுள்ளார்” என சந்தேகம் வெளியிட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தனது பக்க நியாத்தை கடிதம் மூலமாக பிரதமர் ரணிலுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
“நான் பாராளுமன்றத்தில் கடந்த 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடர்பில், அண்மையில் தங்களால் பாராளுமன்றத்தில் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் தொடர்பில் என் சார்பு நியாயங்களை தெளிவுபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என சாணக்கியன் எழுதியுள்ள கடிதத்தில் கீழுள்ள விடயங்களை தெரிவித்துள்ளார்.
“நான் ஒரு போதும் கடந்த மே 09 ஆம் திகதி நடைபெற்ற கலவரத்தை தூண்டும் விதமாக அல்லது ஆதரிக்கும் முகமாக, அல்லது அதற்கு ஆதரவு வழங்கும் வகையிலும் எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை. 30 வருடங்களாக அடக்குமுறைகளுக்குட்பட்ட சமூகத்திலிருந்து வந்தவன் என்ற அடிப்படையில், இலங்கை முழுவதிலுமுள்ள மக்களின் அமைதி, நல்லிணக்கம், சுமூகமான வாழ்வு போன்றவற்றுக்கான மக்களின் குரலாக நான் செயற்படுகிறேன். இதனை நீங்கள் அவதானித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
பிளவுபடுவதிலும் பார்க்க, ஒற்றுமையான இலங்கையர்களின் பன்முகத்தன்மையே எங்களின் பலமாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்களில் உறுதியாக இருப்பவன் நான்.
தங்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்கள் குறைகளை நீக்கவில்லை. வாக்களித்த மக்களின் நலனைப் பாதுகாப்பதில் தவறிவிட்டதாக அவர்கள் ஒருவேளை உணர்ந்திருக்கலாம். இவ்வாறான காரணங்களினால் வன்முறைகளில் ஈடுபட்டிருக்கலாம் என எனது மே 09 ஆம் திகதி சம்பவங்கள் தொடர்பில், எனது பாராளுமன்ற உரையில் தெரிவித்தேன். ஆனால் அது நான் வன்முறைகளுக்கும், தீ மூட்டல்களுக்கும் ஆதரவு வழங்கியது போன்றதான தோற்றப்பாட்டை தங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது அல்லது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
கெளவர பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் பாராளுமன்ற அஞ்சலி நிகழ்வில் “அனைவரும் சோகத்திலிருக்கு ஒருவர் மட்டும் இந்த கொலை சம்பவத்தை மன்னித்து விட்டார்” என பிரதமராகிய நீங்கள் என்னை சுட்டி காட்டியது வருத்தமளிக்கிறது. லகஸ்மன் கதிர்காமரின் கொலையையும், அமரகீர்த்தி அத்துகோரலவின் கொலையையும் ஒரே வகையில் அமைந்துள்ளன. இந்த விடயங்களை பிரதமருக்கும் எனது சக பாராளுமன்ற உறுப்பினர்களும் விளக்குவது எனது கடமையென உணர்கிறேன்.
1990 ஆம் ஆண்டு தற்போதய பாராளுமன்ற உறுப்பினரால் மேற்கொள்ளப்பட்ட 600 காவல்துறையினரின் கொலை சம்பவதத்துடன், அபோது பிறந்திருக்காத என்னை தொடர்புபடுத்தி தங்களால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் நான் திகைத்து போனேன். இது தொடர்பில் தங்களுக்கு பிழையான தகவல்கள் வெளங்கப்பட்டுள்ளன. இது தொடர்பிலான எனது விளக்க அறிக்கையினை பார்வையிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தற்போதைய சூழலில், ஒரு நாட்டின் பிரதமரினால் வெளியிடப்படும் இவ்வாறான அறிக்கைகள், பொது மக்கள் கண்ணை மூடிக்கொண்டு நம்பும் நிலையினை ஏற்படுத்தும். இதன் மூலம் எனது பெயருக்கு ஏற்படும் களங்கத்தை ஈடு செய்ய முடியாது. அத்தோடு எனது உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே இந்த தவறான புரிதல்களை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும், அவ்வாறு செய்தல் பாராட்டுதலுக்கு உரியது.
இந்த மோசமான காலகட்டத்தில் இந்த நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதும், அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதும், மூன்று வேளை உணவையும் உறுதிப்படுத்துவதும், அவர்களை இந்த துயரத்திலிருந்து விடுவிப்பதுமே பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் முன்னுரிமையும் காலத்தின் தேவையும், என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நாட்டு மக்களுக்கு ஆறுதலளிக்கவும், அவர்களுக்கு உடனடி மற்றும் நிலையான நிவாரணமளிக்கவும், அவர்களின் தற்போதைய குறைகள் மற்றும் எதிர்கால நல்வாழ்வுக்காக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் நான் ஆதரிப்பேன்.
இந்த தகவல்கள் எனது நிலைப்பாடு தொடர்பில் தங்களுக்கு முழுமையான தெளிவை ஏற்படுத்தியிருக்கும் என நம்புகிறேன். இது தொடர்பாக மேலதிக விளக்கங்கள் தேவைப்படின் நான் தெளிவுபடுத்த தயாராக இருக்கிறேன்.