இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஸ்டார் இந்தியா தொலைகாட்சி நிறுவனம் பெற்றுள்ளது. அடுத்த ஐந்து வருடத்துக்கான உரிமத்தை அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 13.4 மில்லியன் டொலர் பெறுமதிக்கு இந்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது. உலக அளவில் இது இரண்டாவது பெரிய தொலைக்காட்சி உரிமை தொகையாகும்.
17 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தம், அமெரிக்கா கால்பந்து லீக் என அழைக்கப்படும் ரக்பி ரக போட்டி தொடரின் ஒரு போட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த படியாக தற்போது IPL தொடர் முன்னேறியுள்ளது. உலகில் அதிகம் பேரால் பார்க்கப்படும் இங்கிலாந்து பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஒரு போட்டிக்கான தொகையாக 11 மில்லியன் அமெரிக்க டொலருக்கே உரிமம் பெறப்பட்டுள்ளது.
தற்போது செய்யப்பட்டுள்ள தொலைக்காட்சி ஒப்பந்த உரிமம் ஒரு போட்டிக்கு கிட்டத்தட்ட 57.5 கோடியும், டிஜிட்டல் உரிமம் 50 கோடியும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த கால ஒப்பந்தத்திலும் பாக்க இரட்டிப்பு தொகை இதுவெனவும் கூறப்படுகிறது.
ஐந்து வருடங்களு 39,575 கோடி ரூபாய்க்கு ஸ்டார் இந்தியா நிறுவனத்துக்கு இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தொலைக்காட்சி மற்றும், டிஜிட்டல் உரிமத்தை வழங்கியுள்ளது.
