அமெரிக்காவின் கடன் இலங்கைக்கு கிடைத்தது

அமெரிக்கா, 120 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கைக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இலங்கையில் நடுத்தர மற்றும் சிறு வியாபாரங்களை மேம்படுத்தும் நோக்கில் இந்த கடன் வழங்கப்படவுள்ளது.

“70 வருடங்களாக அமெரிக்கா இலங்கைக்கு பல வழிகளிலும் உதவி வருகிறது. அமெரிக்காவின் உதவி திட்டங்கள், கடன்கள், போன்றவற்றின் மூலமாக பொருளாதர மேம்பாட்டுக்கும் மக்களின் வளர்ச்சிக்கும் அமெரிக்கா உதவி வருகிறது. அது போன்றே இந்த கடன் மூலமாக இலங்கை மக்களுக்கு வேலை வாய்ப்புகள், வியாபார முன்னேற்றம் என்பன நடைபெறும்” என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கூறியுள்ளார்.

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை இலங்கைக்கு இந்த புதிய கடனுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் பலருக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கும் என அமெரிக்கா நம்புகிறது.

சிறிய மற்றும் நடுத்தர வியாபார நடவடிக்கைகள் பொருளாதர சிக்கல்கள் மூலமாக பாதிப்புள்ளாகியுள்ளன. இந்த கடன் மூலம் அவை மேம்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் இந்த கடன் கிடைப்பதனை தான் வரவேற்பதாகவும், தேவையான நேரத்தில் இந்த கடன் வழங்கப்படுவதற்கு தனது நன்றிகளை தெரிவிப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கடன் இலங்கைக்கு கிடைத்தது

Social Share

Leave a Reply