இலங்கைக்கு உதவ சீனா களத்தில் குதிக்கிறது?

இலங்கையின் தற்போதைய பொருளாதர சிக்கல் நிலைக்கு கைகொடுக்க சீனா தயாராகிறது. இலங்கைக்கான மானியம், வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட திட்டங்களுக்கு தொடர்ச்சியான மற்றும் உறுதியான ஆதரவை வழங்க தாம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது.

நேற்று சீன தூதுவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்த விடயம் தொடர்பில் உறுதி செய்துள்ளார். கடன்களை வழங்கியுள்ள சீன வங்கிகள் மீண்டும் இலங்கையோடு பேச்சுவார்த்தைகளை நடாத்த தயாராக இருப்பதாகவும் சீன தூதரகம் மேலும் கூறியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டங்கள் ஆரம்பித்ததும் சீனா தங்களது உதவிகள் தொடர்பில் பெரியளவில் எதனையும் கூறவில்லை. இவ்வாறான சூழ் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இந்தியா வழங்கியது போன்று, சர்வதேச நாணய நிதியத்தின் தலையீடுகள் இல்லாமலேயே சீனா கடன் கொடுக்க முன்வருமா என்பது தொடர்பில் உறுதியான தகவல்கள் எதனையும் வழங்கவில்லை.

இலங்கைக்கு உதவ சீனா களத்தில் குதிக்கிறது?

Social Share

Leave a Reply