பிள்ளையை ஆற்றில் வீசி தற்கொலைக்கு முயற்சித்த பெண் கைது
வத்தளை, களனி கங்கைக்கு மேலே அமைக்கப்பட்டுள்ள கதிரான பாலத்திலிருந்து ஐந்து வயது மகனை ஆற்றில் வீசிவிட்டு தற்கொலை செய்ய முயற்சித்த தாயொருவரை மக்கள் தடுத்து காப்பாற்றியுள்ளனர்.
காப்பாற்றப்பட்ட 43 வயதான பெண் வத்தளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். காணமல் போன சிறுவனை தேடும் பணிகள் பொலிஸ் மற்றும் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
