ஊரடங்கில்லை. பாடசாலைகள், அலுவலகங்கள் மூடப்படலாம்.

நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்க ஜனாதிபதி, பிரதமர் மறுப்பு. அரச அலுவலங்கள், , பாடசாலைகள் இணையவழி சேவை தொடர்பில் கவனம் செலுத்தப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் அசாதாரண சூநிலையை கொண்டு அடுத்த வாரம் ஊரடங்கு சட்டம் அல்லது, நாட்டை முழுமையாக மூடுவது தொடர்பில் சில அமைச்சர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரியதாகவும் அதற்கு அவர்கள் இருவரும் வேண்டாம் என்ற பதிலை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டை மூட வேண்டிய தேவை இல்லை எனவும், அடுத்த வாரம் இலங்கைக்கு மேலும் எரிபொருள் கப்பல்கள் வரவுள்ளமையினால் எரிபொருள் சிக்கல் நிலை முடிவுக்கு கொண்டு வரப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருவருமே தெரிவித்துள்ளனர்.

ஆனால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்களை மூடி இணையவழி செயற்பாட்டின் மூலம் சேவைகளையும், கல்வி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் திட்டம் தொடர்பில் அரசாங்கம் கலந்துரையாடி வருவதாகவும் அறிய முடிகிறது. இருப்பினும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஊரடங்கில்லை. பாடசாலைகள், அலுவலகங்கள் மூடப்படலாம்.

Social Share

Leave a Reply