இன்று 50 மெற்றிக் தொன் பெற்றோல் மாத்திரமே இலங்கை பூராகவும் விநியோகத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. ஒரு நாளைக்கு தேவையான பெற்றோல் தொகையிலும் பார்க்க இது 100 மடங்கு குறைவாகும். ஒரு நாளைக்கு தேவையான பெற்றோலின் அளவு 5000 மெற்றிக் தொன்.
இன்று எரிபொருள் விநியோக தகவல் செயலிக்கு தரவேற்றம் செய்யப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கு மீண்டும் 23 ஆம் திகதியே பெற்றோல் வருமெனவும் அது வரையில் பெற்றோல் நிலை இவ்வாறே காணப்படுமென கூறப்படுகிறது.
மக்கள் வங்கி கடன் ஒப்பந்த கடிதத்தை வழங்கியுள்ளது. கடிதம் கிடைத்தால் இந்த வார இறுதி பெற்றோல் இலங்கைக்கு வருமென வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கான சாத்தியகூறுகள் இருப்பதாக தெரியவில்லை.
24 ஆம் திகதி எரிபொருட்கள் விலையேற்றப்படுமெனவும் அதன் பின்னரே எரிபொருள் விநியோகம் சுமுகமான நிலைக்கு வருமென ஐக்கிய மக்கள் சக்தி தொழிற்சங்க பேச்சாளர் ஏற்கனவே கூறியுள்ளார்.
நிலைமைகள் எவ்வாறு இருப்பினும் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் அதேவேளை, பலர் வாகனங்களிலேயே தங்கள் முழு நேரத்தையும் செலவிட்டு நாற்கணக்கில் காத்திருக்கின்றனர்.
