இந்தியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் இந்தியா, ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது 20-20 போட்டியில் மிக அபாரமாக இந்தியா அணி 82 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்துள்ளது. இந்தியா அணியின் மிகப் பெரிய 20-20 வெற்றி இதுவே.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது. இதில் டினேஷ் கார்த்திக் 55 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இந்தியாவின் முதல் 20-20 போட்டியில் விளையாடிய கார்த்திக் இன்றைய போட்டியிலேயே அரை சதத்தை பெற்றுள்ளார். ஹார்டிக் பாண்ட்யா 46 ஓட்டங்களையும், இஷன் கிஷன் 27 ஓட்டங்களையும் பெற்றனர். தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் லுங்கி கிடி 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 16.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 87 ஓட்டங்களை பெற்றது. இதில் ரஸி வன் டே டுஸென் 20 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். தென்னப்பிரிக்கா அணியின் குறைந்த ஓட்ட எண்ணிக்கை இதுவே.
இந்தியா அணியின் பந்துவீச்சில் அவேஷ் கான் 4 விக்கெட்களையும், யுஸ்வேந்திரா சஹால் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
