அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியில் மூலம் நியமிக்கப்பட்ட தம்மிக்க பெரேரா, நாளை(21.06) பதவியேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் பாராளுமன்றம் கூடும் நிலையில் அவர் பதவியேற்பார் என கூறப்பட்டது. இவ்வாறான சூழ் நிலையில் அவர் நாளைய தினம் பதவியேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டது தவறு எனவும் அதனை இரத்து செய்ய கோரியும் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் சார்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தம்மிக்க பெரேராவின் இந்த முடிவினை அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வழக்கின் முடிவில் உயர் நீதிமன்றம் தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கலாமென்ற தீர்ப்பு கிடைத்தாலே அவர் பதவியேற்பார். பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றாலே அமைச்சராகவும் பதவியேற்கலாம்.
தம்மிக்க பெரேரா மாவட்ட தேர்தல்கள் பட்டியலிலா, தேசிய பட்டியல் நியமன பெயர் பட்டியலிலோ காணப்படாத நிலையில் அவரை பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க முடியாதென தெரிவித்தே உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
