லிற்றோ சமையல் எரிவாயு ஜூலை மாதம் 5 ஆம் திகதிக்கும் 12 ஆம் திகதிக்குமிடையில் இரண்டு கப்பல்களில் வரவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முடித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இரண்டு கப்பல்களிலும், 7,000 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு வருகை தரவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் சமையல் எரிவாயு வரவு தொடர்பில் அறிவிப்புக்கள் வெளியாகிய போதும் அவை தெரிவிக்கப்பட்ட திகதிகளில் வந்திருக்கவில்லை. இந்த அறிவிப்பு கூட சரியான திகதிகள் தெரிவிக்கப்படாத நிலையில் வந்த பின்னரே உறுதியாக தெரிய வரும்.
