தமிழ் மக்கள் விடுதலை புலிகள், கொலைகள் மற்றும் கடத்தல்கள் சம்பவங்களுடன் ஈடுபட்டதாக, புலம்பெயர்ந்து அரசியல் தஞ்சம் புகுந்த அந்த கட்சியின் உறுப்பினர் ஒருவர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தகவல் வழங்கியுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. எமது செய்தியிலும் நாம் அதனை வெளியிட்டிருந்தோம்.
குறித்த நபர் கூறிய விடயங்களில் எந்தவித உண்மையுமு இல்லை எனவும், வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் எவ்வாறான கருத்துக்களையும் கூற முடியுமெனவும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
“வெளிநாடு செல்கிறவர்கள் இவ்வாறான பொய்யான குற்றங்களை முன் வைத்து அரசியல் தஞ்சம் கோருவது சாதரணமானது. அதே போலவே இந்த குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகளில் ஈடுபாடுவதாக” மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி கீழுள்ளது.