இன்று(26.06) அதிகாலை எரிபொருள் விலையேறியதனை தொடர்ந்து விலையதிகரிப்புகள் ஏற்பட ஆரம்பித்துள்ளன.
முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. முதல் கிலோ மீற்றருக்கான கட்டணம் 100 ரூபாவாகவே காணப்படுகிறது. இரண்டாம் கிலோ மீற்றருக்கான கட்டணமே 80 ரூபாவிலிருந்து 90 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை உணவக சங்கம் உணவுப் பொதி மற்றும் உணவுகளின் விலைகளை 10 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலையேற்றம் காரணமாக இந்த விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள விலையேற்றங்கள் இவை. அறிவிப்புகளின்றியே பல பொருட்கள் விலையேறும் என்பது அனைவரும் அறிந்ததே.
