எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நிற்பதில் பலனில்லை

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்பதில் எந்த பலனுமில்லை என எரிபொருள் காவு வண்டி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. சனி, ஞாயிறு தினங்களில் விடுமுறை தினங்கள் என்ற காரணத்தினால் எரிபொருள் விநியோகம் நடைபெறவில்லை எனவும், மீண்டும் திங்கட்கிழமை (27.06) விநியோகம் நடைபெறுமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

டீசல் விநியோகம் வழமை போன்று நடைபெறும் எனவும், பெற்றோல் விநியோகம் நடைபெறாத எனவும் தெரிவித்துள்ள சங்கம், 1000 மெற்றிக் தொன் பெற்றோல் மாத்திரமே கையிருப்பிலுள்ளதாகவும், அவை அத்தியாவசிய சேவைகளுக்கு பயன்படுத்தவுள்ளதாகவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வழமை போன்று எரிபொருள் விநியோகம் நடைபெறுகிறது.

எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நிற்பதில் பலனில்லை

Social Share

Leave a Reply