இலங்கையில் புதிய எரிபொருள் நிலையம் ஒன்று அமைப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய அரபு இராட்ச்சியத்தின் முன்னணி எரிபொருள் விநியோக நிலையமான அபுதாபி தேசிய ஒயில் கூட்டுத்தாபனம் இலங்கையில் எரிபொருள் நிலையத்தினை ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக தெரியவருகிறது.
ஐக்கிய அரபு இராட்ச்சியத்தின் மிகப் பெரிய எரிபொருள் விநியோகமான நிறுவனமாக இந்த நிறுவனம் கருதபப்டுகிறது. அரச மற்றும் முக்கிய தனியார் நிறுவனங்களுக்கு இந்த நிறுவனமே விநியோகம செய்து வருகிறது.
இலங்கையில் இந்த நிறுவனம் எரிபொருள் நிலையம் அமைப்பது தொடர்பில் அரசாங்கம் சார்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.
