எரிபொருள் விலையேற்றம் முறையற்றது – பொது சேவைகள் ஆணைக்குழு

தற்போது நடைமுறைக்கு வந்துள்ள எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் தனது அதிருப்தியை பொதுசேவைகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரட்நாயக்க தெரிவித்துள்ளார். இறுதியாக மேற்கொள்ளப்பட்ட விலையேற்றம் சூத்திரத்தின் அடிப்படையிலேயோ அல்லது விஞ்ஞான ரீதியிலோ இடம்பெறவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எரிபொருள் இறக்குமதி கட்டணத்தின் அடிப்படையிலேயே இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஊடங்களுக்கு வழங்கப்பட்ட அறிக்கையை மறுத்த அவர், ஒரு பரல் 176 டொலராக காணப்படுவதாகவும் அதன் இறக்குமதி வரி, மற்றைய வரிகளை கணக்கிட்டு அதன்படி புதிய விலை மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என ஜனக ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

விலை மனு கோரல் அடிப்படையில் எரிபொருள் கொள்வனவு நடைபெறவில்லை எனவும், யாரிடம் எரிபொருளை கொள்வனவு செய்ய முடியுமோ, அவர்களது விலைக்கு ஏற்ப கொள்வனவு செய்யப்படுவதாகவும், அதன்படியே விலையேற்றம் செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான நடைமுறை முழுமையாக பிழை எனவும், சரியான நடைமுறை அல்ல எனவும், கூறியுள்ள அதேவேளை, அரசாங்கம் டொலரின் சராசரி பெறுமதி அடிப்படையிலேயே எரிபொருள் கொள்வனவை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதங்களில், எரிபொருள் விலையேற்றம் சர்வதேச ரீதியில் இடம்பெறவில்லை எனவும், டொலரது பெறுமதியும் அதிகரிக்கவில்லை. அவ்வாறான நிலையில், பிழையான கணக்கிடல் மூலம் செய்யப்பட்ட இந்த விலையேற்றம் சட்டத்துக்கு முரணானது என அவர் கூறியுள்ளார்.

எரிபொருள் விலையேற்றம் முறையற்றது - பொது சேவைகள் ஆணைக்குழு

Social Share

Leave a Reply