சுற்றுலா பயணிக்கு பெற்றோல் மறுத்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு

கடந்த வெள்ளிக்கிழமை காலி எரிபொருள் நிலையத்தில் சுற்றுலா பயணி ஒருவருக்கு பெற்றோல் தர முடியாதென பொலிஸ் அதிகாரி மறுத்ததோடு ஆங்கிலத்தில் பல விடயங்களை தெரிவித்திருந்தார். சுற்றுலா பயணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பெற்றோல் வழங்குமாறு அரசாங்கம் அறிவித்திருக்கும் நிலையில் அவர் அதனை மறுத்திருந்தார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்கள் மூலம் மிகவும் அதிகமாக பகிரப்பட்டிருந்தன.

இவ்வாறான நிலையில் சுற்றுலா அபிவிருத்தி திணைக்களம் அந்த பொலிஸ் அதிகாரி மீது கடிதம் மூலமாக, பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளது.

நடைபெற்ற விடயம் இலங்கையிலும், சர்வதேச ரீதியிலும் பல லட்சம் பேரினால் சமூக வலைத்தளங்கள் மூலமாக பார்வையிடப்பட்டுள்ளன. இலங்கையின் பொருளாதர மீழ்ச்சியினை சுற்றுலா துறை மூலமாக எதிர்பார்த்துள்ள நிலையில், இவ்வாறான சம்பவங்கள் மேலும் பின்னடைவை ஏற்படுத்துகின்றன என சுற்றுலா அபிவிருத்தி திணைக்கள தலைவர் பிரியந்த பெர்னாண்டோ முறைப்பாடு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எழுத்து மூலமாகவோ அல்லது வீடியோ மூலமாகவோ வெளிப்படுத்தி, அதனை பிரபல்யப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் பிரியந்த பெர்னாண்டோ மேலும் கோரிக்கை முன் வைத்துள்ளார். அத்தோடு சுற்றுலா காவல்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கும் சுற்றுலா பயணிகளது பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுற்றுலா பயணிக்கு பெற்றோல் மறுத்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு

Social Share

Leave a Reply