சட்டவிரோத படகு வெளிநாட்டு பயணிகள் கைது

திருகோணமலை ஜமாலியா கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட 51 பேரை கடற்கரையினர் நேற்றிரவு (02.07) கைது செய்துள்ளனர்.

கடற் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டவர்களில் மூன்று சிறுவர்கள் ஆறு பெண்கள் அடங்குவதாகவும் கடற்படையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர்களை தற்போது திருகோணமலை கடற்படை முகாமில் தடுத்து வைத்து வாக்குமூலம் பெற்று வருவதுடன் இன்று மாலை திருகோணமலை துறைமுக பொலிசாரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கம்பஹா, இரத்னபுரி ஆகிய இடங்களை சேர்ந்த 5 தொடக்கம் 56 வயதானவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத படகு வெளிநாட்டு பயணிகள் கைது

Social Share

Leave a Reply