கொல்கொத்தா அபார வெற்றி – இக்காட்டான நிலையில் மும்பை

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் கொல்கொத்தா அணி இலகுவான 7 விக்கெட்களினால் வெற்றி பெற்றுளளது.

இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியினை தாண்டி நான்காவது இடத்துக்கு முன்னேறி தனக்காக அடுத்த சுற்று வாய்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
நடப்பு சம்பியன்ஸ் மும்பை அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. இனி விளையாடவுள்ள சகல போட்டிகளிலும் வெற்றி பெறவேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. கொல்கொத்தா அணிக்கும் அதே நிலையே காணப்படுகிறது.


இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களை பெற்றது. இதில் குயின்டன் டி கொக் 55(42) ஓட்டங்களையும், ரோஹித் ஷர்மா 33(30) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா மற்றும் லூக்கி பெர்குசன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.


பதிலுக்கு துடுப்பாடிய கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி 15.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்தது 159 ஓட்டங்களை பெற்றது. இதில் ராகுல் திருப்பதி ஆட்டமிழக்காமல் 74(42) ஓட்டங்களையும், வெங்கடேஷ் ஐயர் 53(30) பந்துகளிலும் பெற்றுக்கொண்டனர். வீழ்த்தப்பட்ட 3 விக்கெட்களையும் ஜஸ்பிரிட் பும்ரா கைப்பற்றினார்.


இன்று(24.09.2021) சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களுர் ரோயல் சலஞ்சேர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது.

Social Share

Leave a Reply