பிரதமர் ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற கூட்ட தொடர் சம்மந்தமாக இன்று(05.07) பாராளுமன்றத்தில் விசேட உரையினை ஆற்றவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியின் பிரதம கொரோடா லக்ஷ்மன் கிரியெல்ல சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதா என்ற கேள்வியினை எழுப்பியிருந்தார் அதற்கான பதிலாக இந்த கருத்தை அமைச்சர் பந்துல கூறியுள்ளார்.
“சர்வதேச ஊடகங்கள் மற்றும் அமெரிக்கா சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாங்கள் உண்மையில் என்ன விடயங்கள் நடைபெற்றுள்ளன என அறிய விரும்புகிறோம். அவ்வாறான விடயங்கள் நடைபெறக் கூடாது. மக்கள் மிகவும் மோசமாக கஷ்டப்டுகின்றனர்.” என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்த்துள்ளார்.
