பாகிஸ்தான் அணி இலங்கை வந்தது.

இரண்டு டெஸ்ட் போட்டிகளடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி இலங்கை வருகை தந்துள்ளது. நேற்று(06.07) பஸ்கிஸ்தான் அணி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மூலமாக இலங்கையை வந்தடைந்தது.

இரு அணிகளுக்குமான முதலாவது டெஸ்ட் போட்டி இம்மாதம் 16 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இரண்டாவது போட்டி நடைபெறவுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கான மூன்று நாட்கள் பயிற்சி போட்டி கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் 11 ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளது.

டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில் இலங்கை அணியின் முக்கிய வீரர்கள் பலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலை இலங்கை அணிக்கு பின்னடைவுகளை தரும் வாய்ப்புகள் உள்ளன.

பாகிஸ்தான் அணி

பாபர் அஸாம் (தலைவர்), அப்துல் ஷபிக், அஹா சல்மான், அஷார் அலி, பாகிம் அஷரப், பவாட் அலாம், ஹரிஸ் ராப், ஹசன் அலி, மொஹமட் நவாஸ், மொஹமட் ரிஷ்வான், நஸீம் ஷா, நயூமன் அலி, ஷப்ராஸ் அஹமட், சவுட் ஷகீல், ஷஹீன் அப்ரிடி, ஷான் மஸூட், யஸீர் ஷா

பாகிஸ்தான் அணி இலங்கை வந்தது.

Social Share

Leave a Reply