முல்லைத்தீவில் நவீன நிலக்கீழ் ஸ்கானருடன் இருவர் கைது!

முல்லைத்தீவு நகர் பகுதியில் வைத்து அதிநவீன ஸ்கானர் இயந்திரத்துடன் ராகமை மற்றும் அவிசாவளை பகுதிகளை சேர்ந்த இருவரை பொலீசார் கைது செய்துள்ளார்கள்.

கடந்த திங்கட்கிழமை (04.07)அதிகாலை இவர்கள் கொழும்பு பேருந்தில் புதுக்குடியிருப்பிற்கு பயணித்து புதுக்குடியிருப்பில் திங்கட் கிழமை தங்கி நின்று செவ்வாய் கிழமை (05.07) இரவு கொழும்பு நோக்கிய பேருந்தில் முல்லைத்தீவு நோக்கி பயணித்த போது முல்லைத்தீவு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பேருந்தில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்களிடம் இருந்த அதிநவீன ஸ்கானர் இயந்திரம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. ககைப்பற்றப்பட்ட ஸ்கானர் இயந்திரம் நிலத்தீன் கீழுள்ள மாணிக்கக்கல்,தங்கம் என்பனவற்றை அடையாளம் காட்டும் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், இவர்களது செயற்பாடுகள் தொடர்பில் வாக்கு மூலங்களை முல்லைத்தீவு பொலீசார் பதிவு செய்துள்ளனர்.

முல்லைத்தீவில் நவீன நிலக்கீழ் ஸ்கானருடன் இருவர் கைது!

Social Share

Leave a Reply