வவுனியா, செட்டிகுளம் பகுதியில் புகையிரத பாதுகாப்பு கடவை இல்லாமையினால் விபத்துக்கள் இல்லாமையினால், தொடர்ச்சியாக விபத்துகள் நடைபெறுவதாகவும், பாதுகாப்பான தொடரூந்து கடவை அமைக்குமாறு கோரியும் செட்டிகுளம் பொதுமக்களால் இன்று ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா, செட்டிகுளம், துடரிக்குளம் வீதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் அண்மையில் இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சாவடைந்திருந்தார்.
இதேவ கடவையில் கடந்தவருடம் இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் மௌலவி ஒருவரும் சாவடைந்திருந்தார்.
இவ்வாறான நிலையில் தொடரூந்து கடவையை பாதுகாப்பானதாக அமைத்து தருமாறு கோரி இன்று பொதுமக்களால் அந்தபகுதியில் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் “பாதுகாப்பற்ற கடவையில் உயிர்போவதை இன்றே நிறுத்துவோம், எம்மை ஏற்றிச்செல்லவே புகையிரதம், எம்மை ஏற்றிக்கொல்ல அல்ல, அதிகாரிகளே நடவடிக்கை எடுங்கள்” போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
